Terms and Conditions

1. கட்டண விதிமுறைகள் (Payment Terms)

நிகழ்விற்கான முற்பணம் செலுத்தப்பட்டால் மாத்திரமே நிகழ்விற்கான திகதி உறுதி செய்யப்படும்.

நிகழ்விற்கான மொத்த தொகையில் 50%-60% வரையிலான தொகையினை
முற்பணமாக செலுத்தவேண்டும்.

தெரிவுசெய்யப்பட்ட ஆல்பத்தின் பக்கங்களை விட கூடுதல் பக்கங்களிற்கு அதற்குறிய பணத்தினை செலுத்தவேண்டும். அத்தோடு ஆல்பம் திருத்தம் பார்க்கப்பட்டு மீதித்தொகையினை செலுத்தப்பட்ட பின்னரே அச்சிடுதலுக்கு அனுப்பப்படும்.

Soft Copy தெரிவுசெய்யும் வாடிக்கையாளர்கள் நிகழ்விற்கு முன்னர் முற்பணம் செலுத்தப்பட்டு நிகழ்வு முடிவுபெற்றதும் மீதிப்பணத்தினை செலுத்தவேண்டும்.

கூடுதல் சேவைகளுக்கு (கூடுதல் புகைப்படங்கள், மறு திருத்தம், கூடுதல் மணிநேரம்) கூடுதல் கட்டணங்கள் பொருந்தும்.

ஆல்பம் மற்றும் Highlight Video தெரிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஆல்பத்தின் தொகையில் 50% உம், Highlight Video வின் முழுத்தொகையினையும் முற்பணமாக செலுத்தவேண்டும்.

2. நிகழ்வின் கால அளவு மற்றும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்தல்
(Event Duration & Photo Selection)

நிகழ்வு இடம்பெற்ற திகதியில் இருத்து ஒரு மாத காலத்திற்குள் வெளிப்புற படப்பிடிப்பு மற்றும் புகைப்படத் தேர்வு (Outdoor shoot & Photo Selection) என்பன வாடிக்கையாளர்களினால் நிறைவு செய்துதரப்பட வேண்டும்.

நிகழ்வில் எடுக்கப்படும் குழு புகைப்படங்கள் (Group Photos) ஆல்பத்தில் 70%-80% புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
புகைப்படத்தேர்வின் வரிசையிலே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

புகைப்படம் தேர்வு செய்யப்பட்ட திகதியில் இருத்து 1-3 மாதங்களுக்குள் வீடியோ மற்றும் ஆல்பங்களை நிறைவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

3. விநியோகம் (Delivery)

ஆல்பம் அச்சிடுதலுக்கு அனுப்பப்பட்டு 7-10 நாட்களுக்குள் தங்களிடம் வழங்கப்படும்.

வீடியோ மீதிப்பணம் செலுத்தப்பட்ட அன்றோ அல்லது ஆல்பம் விநியோகிக்கப்படும் அன்று வழங்கப்படும்.

Highlight Video 7-10 நாட்களுக்குள் தங்களிடம் வழங்கப்படும்.

SoftCopy சேவையினை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களின் Files 1-2 நாட்களுக்குள் Google Drive மூலம் அனுப்பி வைக்கப்படும். (ஒரு வார காலம் வரை Google Drive ல் சேமிப்பில் இருக்கும்)

SoftCopy பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தங்களது File களை நிகழ்வு நடைபெற்ற திகதியில் இருந்து 1 மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆல்பம் விநியோகிக்கப்பட்டு ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் திருத்தி செய்து தரப்படும். இருப்பினும் தங்களினால் மேற்கோள்ளப்பட்ட தவறுதலுக்கு அதற்கு செலவாகும் செலவினை நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

4. இரத்து மற்றும் ஒத்திவைப்பு (Cancellation / Postponement)

நிகழ்வு உறுதி செய்யப்பட்ட திகதியில் இருந்து 7 நாட்களுக்கு முன்னர் இரத்து செய்யலாம். நிகழ்விற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட முற்பணம் திருப்பித்தரப்படும். இருப்பினும் குறித்த திகதியில் குறித்த நிகழ்விற்காக திகதி உறுதிப்படுத்தப்பட்டு பிரிதொரு வாடிக்கையாளரின் நிகழ்வு எங்களினால் (YOGA FOTO STATION) இரத்து செய்யப்பட்டால் முற்பணம் திருப்பித்தரபடமாட்டாது.

நிகழ்வு ஒத்திவைப்பதாயின் அல்லது திகதியில் மாற்றம் இருப்பின் எங்களிடம் (YOGA FOTO STATION) முன்னரே தெரிவிக்க வேண்டும்..

5. தரவு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு (Data Storage & Safety)

உங்கள் நிகழ்வு இடம்பெற்று ஆல்பம் மற்றும் வீடியோ விநியோகம் வரையிலான காலப்பகுதிக்குள் உங்களுடைய தரவுகளுக்கு (Files) YOGA FOTO STATION நிருவனமே பொறுப்பாகும். (மேற்குறிப்பிட்ட காலவரையறை கவனத்தில் கொள்ளப்படும்)•

மேற்குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஆல்பம் மற்றும் வீடியோக்களை நிறைவு செய்துகொள்வது உங்களுடைய பொறுப்பாகும்.

Hard Disk Failure / Natural issues இனால் தரவுகள் இழக்கப்படலாம் எனவே இதனை கருத்தில் கொண்டு தங்களுடைய சேவையினை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை குறிப்பிட்ட காலவரையறைக்கு அதிகமான நாட்கள் கடந்தும் தங்களால் சேவையினை நிறைவுசெய்ய முடியவில்லை எனின் தங்களுடைய தரவுகள் மேற்குறிப்பிட்ட காரணங்களினால் இழக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை YOGA FOTO STATION நிறுவனம் பொறுப்பேற்காது.